பெரும் குழப்பத்தில் தமிழரசு கட்சி! பொதுச்செயலாளர் பதவிக்கு மற்றுமொரு வேட்பாளர்
புதிய இணைப்பு
தமிழரசுக் கட்சியின் பொது குழுக்கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் சற்றுமுன் ஆரம்பமாகிய நிலையில் அங்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்றையதினம் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான புதிய தெரிவு இடம்பெறவுள்ளமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தற்போது அங்கு பரபரப்பான நிலை உருவாகியுள்ளது.
ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் கடும் குழப்ப நிலை நிலவுவதாகவும், பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வாக்கெடுப்பு கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இன்றையகூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவு நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்