ஆட்சி யார் வசம்? பரபரப்பான நிலையில் தமிழகம் - நேரலை
today
election
tamil nadu
ruselts
By Vanan
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆறாம் திகதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்களிப்பு நடைபெற்றது.
மொத்தமுள்ள 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் இன்று காலை எட்டு மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான இறுதி முடிவு இன்று பிற்பகல் அளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே கட்சி தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்