பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு

By Kajinthan Aug 01, 2026 10:38 PM GMT
Report

வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை தொண்டர் அடிப்படையில் பணியாற்றிய 389 சுகாதாரப் பணியாளர்களுக்கு வடக்கு மாகாணத்தால் நடத்தப்பட்ட இரண்டு நேர்முகத் தேர்வுகளின் பின்னர் சுகாதார சேவை உதவிப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

அத்துடன், அன்றைய தினமே அவர்களை அவர்களது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அறிக்கையிட்டு குறித்து ஒதுக்கிய சேவை நிலையங்களில் கடமைகளை ஆரம்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலி அழைப்புகள்! பிரதி அமைச்சரின் பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி...

போலி அழைப்புகள்! பிரதி அமைச்சரின் பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி...

திறைசேரியின் சுற்றறிக்கை

நியமனத்தைப் பெற்ற 389 சுகாதாரப் பணியாளர்களும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு அறிக்கையிடச் சென்றபோது அவர்கள் தற்போது பணியை ஆரம்பிக்க முடியாது என்றும், அந்த நியமனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வாய்மூலமாக அறிவிக்கப்பட்டது.

பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு | Court Order Regarding 389 Healthcare Workers

இதன்பின்னர், குறித்த நியமனம் திறைசேரியின் சுற்றறிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன் குறித்த சுற்றறிக்கையானது மீளவும் திறைசேரியின் செயலாளரால் 2020 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி யன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையால் ரத்துச் செய்யப்பட்டது.

இதையடுத்து தமக்கு நீதிகோரி குறித்த சுகாதாரப் பணியாளர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 10ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டபோது குறித்த மனுதாரர்களான சுகாதாரப் பணி உதவியாளர்கள் தங்களது நியமனத்துக்கான சட்டபூர்வமான உரித்துடையவர்கள் என்பதை முகத்தோற்றளவில் மன்று ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து ஆட்சேபனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த 22ஆம் திகதி திகதியிடப்பட்டதுடன் நேற்று விவாதத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது. நேற்று வழக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராஜா, மரியதாஸ் யூட் டினேஸ் மற்றும் சட்டத்தரணி ஜோர்ஜ் இம்மானுவேல், சட்டத்தரணி ஜெயபாலசிங்கம் நிஷாந்தன் ஆகியோர் சட்டத்தரணி தியாகலிங்கம் டிலக்சனாவின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னிலையாகினார்கள்.

பிரதிவாதிகள் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி கஹவிட முன்னிலையாகியிருந்தார். அத்துடன் வடக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்து மேலதிக செயலாளர் சுரேந்திரனும் மன்றில் தோன்றியிருந்தார்.

இதன்போதே, வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதும் முழுமையான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு வழக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்

பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016