தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய்

Vijay Tamil nadu Tamil Nadu Election 2026 TVK
By Dharu Apr 22, 2026 12:47 PM GMT
Report

தமிழ்நாட்டின் அரசியல் என்பது எப்போதுமே தேர்தல்களைக் கடந்த ஒன்று. அது அடையாளம், மொழி, சமூக நீதி மற்றும் ஆளுமைகளைப் போலவே கருத்துக்களாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பல தசாப்தங்களாக, இது இருமுனைப் போட்டியாக இருந்து வருகிறது. மேலும், வழக்கம் போலவே, தி.மு.க மற்றும் அதிமுகவே பிரதான இம்முறையும் கட்சிகளாகத் தொடர்கின்றன.

ஆனால், ஏப்ரல் 23 அன்று(நாளை - 23.04.2026) தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஜய் களத்தில் இறங்கியிருப்பதும், நீண்ட காலமாக நுழையப் போராடி வந்த மாநிலத்தில் பா.ஜ.க காலூன்ற முனைவதும், வளர்ச்சி மற்றும் அடையாளம் குறித்த முரண்பட்ட தொலைநோக்குப் பார்வைகள் களத்தில் இருப்பதும் என அந்தச் சமன்பாடு விரிவடையத் தொடங்கியுள்ளது.

விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு

விஜய் சொத்தை குறைத்து காண்பித்தது முறைகேடு! சென்னை நீதிமன்றம் விடுத்த உத்தரவு

சிக்கலான தேர்தல்

இந்தத் தேர்தல், வெளித்தோற்றத்தில் தெரிவதை விட பல மடங்கு சிக்கலானது என கூறலாம்.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிர பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றதோடு, வளர்ச்சி, ஊழல், மத்திய நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்த தீவிர விவாதங்களும் நடைபெற்றன.

தி.மு.க, அதிமுக மற்றும் பிற கட்சிகள் போட்டியிடும் இந்த நாற்கோணத் தேர்தலுக்கு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு மேலும் சுவாரஸ்யத்தை சேர்த்துள்ளது.

அதுவும் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தி.மு.க கோட்டைகள் என அடைமொழி இடப்படும் இடங்களில் போட்டியிட முடிவுசெய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி போன்ற அரசியல் ஜாம்பவான்கள் தங்களது இறுதிப் பிரசாரங்களை மேற்கொண்ட நிலையில், தமிழகத்தின் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கியத்துவம் வாய்ந்த பிரசாரம் பதற்றமான சூழலில் நிறைவடைந்தது.

ஏப்ரல் 23 அன்று நடைபெறவிருக்கும் இத்தேர்தலில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது எதிர்கால செயற்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்

தனது எதிர்கால செயற்பாட்டை திட்டவட்டமாக அறிவித்தார் விஜய்

T.V.K வியத்தகு திருப்பம்

பிரசாரம் முழுவதும் வளர்ச்சிப் பிரச்சினைகள், மத்திய நிதி ஒதுக்கீடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்தன.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

மேலும், புதிய கட்சிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் பங்கேற்புடன் நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ள இந்தத் தொகுதி மறுவரையறைப் பணி, போட்டிக்கு மேலும் சிக்கலைக் கொண்டுவந்தது.

இந்நிலையில் இம்முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, ஒரு வியத்தகு திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.கவை ஆதரிக்கும் நடிகர் அரசியல்வாதியான கமல்ஹாசனின் வருகை, இந்த பரபரப்பான அரசியல் களத்தை மேலும் தீவிரப்படுத்தி, இது உன்னிப்பாகக் கவனிக்கப்படும் ஒரு போராக மாறியுள்ளது.

தமிழகத்தில் பிரசாரத்தின் இறுதி நாளில், மூத்த தலைவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான தொகுதிகளில் வலம் வந்துகொண்டிருக்கவும், கட்சி அமைப்புகள் தங்களின் நிறைவுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்த நிலையில், மாநிலத்தின் மிகவும் கணிக்க முடியாத வேட்பாளரான விஜய், தனது பிரசாரத்தைத் தொடங்கியதைப் போலவே நிறைவு செய்தார்.

அதாவது, பிரம்மாண்டம், குறைகள் மற்றும் சாத்தியக்கூறுகள் அனைத்தும் ஒருங்கே கலந்த ஒரு காட்சியாக டி.விகே தற்போது களத்தில் உள்ளது. அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ளனர்.

ஆனால், இந்தப் பிரபலம் மற்றும் ஆரவாரத்திற்கு அடியில், முந்தைய மூன்றாவது முன்னணிப் போட்டியாளர்களை விட விஜய்யின் கணிப்பை மதிப்பிடுவதைக் கடினமாக்கிய ஒரு காரணி மறைந்துள்ளது.

பல பத்தாண்டுகளில், இளைஞர்களுடன் மிக வலுவான உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்ட முதல் முக்கிய மாற்று முகமாக அவர் இருக்கலாம்.

நடிகராக இருந்து டி.வி.கே தலைவராக மாறிய அவர், செவ்வாயன்று சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு

தி.மு.க தலைமை

நலத்திட்ட வாக்குறுதிகள், எதிரிகள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையினருக்கான வேண்டுகோள்கள், தன்னை மட்டுமே குறிவைப்பதாகக் கூறப்படும் முறைப்பாடுகள் , மற்றும் உண்மையாகவே புதியதொரு விடயத்தைத் தாம் ஒருவரே பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்ற தொடர்ச்சியான கருத்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு உரையை அவர் ஆற்றினார்.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

“என் இதயத்தில் வீற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்,” என்று பேச்சைத் தொடங்கிய அவர், “தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்பப் போகும் தேர்தலின் கடைசிப் பிரசாரம் இதுதான்,” என அறிவித்தார்.

பல வாரங்களாக, தமிழகத் தேர்தல் ஒரு அசாதாரணமான இரட்டைப் பண்பைக் கொண்டுள்ளது. ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணி, இறுதிக்கட்டத்தை ஒரு சாதகமான நிலையில் எதிர்கொள்வதாகப் பல அரசியல் தரப்புக்களின் கருத்துக்களை இந்திய ஊடகங்கள் மேற்கோள்காட்டியிருந்தன.

ஆனால், விஜய் ஒரு தீர்க்கப்படாத காரணியாகவே இருக்கிறார். முதல் முறை போட்டியிடும் அவர், இளம் வாக்காளர்களிடையே பெற்றுள்ள செல்வாக்கு, உடனடியாக ஆட்சியைப் பெற்றுத் தராவிட்டாலும், பல தொகுதிகளில் உள்ள வாக்கு வித்தியாசங்களை மாற்றியமைக்கக்கூடும்.விஜய்யின் பேச்சு, அவரது பேரணிகளின் அடையாளமாக நாளுக்கு நாள் மாறிவரும் உயிரோட்டமான பாணியில் அமைந்தது. அது வழக்கமான அரசியல் சொற்பொழிவுகளைக் காட்டிலும், சீற்றம், அவசரம் மற்றும் கிளர்ச்சியின் வெளிப்பாடாகவே அதிகம் வெளிப்பட்டது.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

வரிகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் மூலம் தி.மு.க அரசு குடிமக்களுக்குச் சுமையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

"பொய்யான வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றிய பிறகு, அவர்கள் வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி, விலைகள் மற்றும் குப்பை வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளனர். அவர்கள் மக்களின் துன்பங்களை மட்டுமே அதிகரித்துள்ளனர்," என்று கூறிய அவர், தனது இலக்கை விரிவுபடுத்தினார்.

"நமது அரசியல் எதிரி தி.மு.க, நமது சித்தாந்த எதிரி பா.ஜ.க இதில் எந்த மாற்றமும் இல்லை," என்று கூறிய அவர், தி.மு.கவின் நிலைப்பாட்டிற்கு மையமான ஒரு கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மற்றொரு கட்டத்தில், தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒரு "ரகசிய பேரத்தை" பேணி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தோல்விக்குப் பிறகு ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க , முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவின் காலில் விழுவார்" என்றும் அவர் கூறினார்.

நெருக்கமான போட்டிகளில் தமிழகத்தின் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் தீர்க்கமானவையாக இருப்பதால், விஜய் தனது மதச்சார்பற்ற நிலைப்பாட்டை வலுப்படுத்த பிரசாரத்தின் இறுதி நாளைப் பயன்படுத்திக்கொண்டார் என்றே கூறியாக வேண்டும்.

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

விஜய்க்கு ஒரு வாய்ப்பு 

“இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்போது, ​​யாரும் எங்களைப் பார்த்து வாலை ஆட்ட முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதியே எங்கள் கட்சியின் கொள்கை, இந்த விஜய் அதிலிருந்து ஒருபோதும் விலக மாட்டார்.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

இந்த விஜய் எப்போதும் சிறுபான்மை சகோதர சகோதரிகளுக்குத் துணையாக நிற்பார்,” என்று அவர் கூறினார்.

அந்த மொழிநடை, தி.மு.கவை அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியுடன் மட்டுமல்லாமல், பாரம்பரியமாக சிறுபான்மை வாக்குகளில் பெரும்பகுதியைத் திரட்டி வரும் தி.மு.க தலைமையிலான அணியுடனும் நேரடிப் போட்டிக்கு உள்ளாக்குகிறது.

பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கும் விஜய்க்கு ஒரு வாய்ப்பு இருக்கலாம். செவ்வாயன்று, தனது பிரசாரத்தின் மீது நிழலைப் படரவிட்டிருந்த கரூர் கூட்ட நெரிசல் சர்ச்சை குறித்தும் விஜய் மீண்டும் பேசினார்.

கரூர் விவகாரத்தில் அவர்கள் என் மீது தேவையற்ற பழியைச் சுமத்துகிறார்கள், என்றார். நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், மக்களைச் சந்தித்த பிறகு, காவல்துறை குறிப்பிட்ட சரியான நேரத்தில் நான் வந்து சேர்ந்தேன். அதை உலகம் முழுவதும் நேரலையில் பார்த்தது. அவரது பேச்சில் இழையோடிய ஒரு பரந்த கருப்பொருளுக்கு ஏற்பவே இந்த வரி அமைந்திருந்தது.

அதாவது, ஆளும் கட்சிகள் தன்னை ஒரு அச்சுறுத்தலாகக் கருதுவதால், அவர் ஓரங்கட்டப்படுகிறார் என்பதே அந்தக் கருப்பொருள்.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

இருப்பினும், செல்வாக்கும் வெற்றியும் வெவ்வேறு சமன்பாடுகள். அனைத்துத் தரப்பு அரசியல் பார்வையாளர்களின் கணக்கீடுகளின்படி, விஜய்யின் வாக்கு சதவீதம் சீராக உயர்ந்துள்ளதான இந்திய கருத்துக்கணிப்புக்கள் கூறி வருகின்றன.

ஆரம்பத்தில் 10% எனக் கணிக்கப்பட்ட நிலையில் இருந்து, பின்னர் 15%, அதன்பின் 16 அல்லது 17% என உயர்ந்து.

சமீபத்திய சில மதிப்பீடுகள் இறுதிக்கட்டத்தில் அதனை 20%-க்கு அருகில் கொண்டு சென்றுள்ளன. ஒரு புதிய கட்சிக்கு இது ஒரு பெரிய அறிமுகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஆட்சி

ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க, கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்து. பொதுவாக மாநிலம் தழுவிய அளவில் 30-35% வாக்குகள் வரை பரவலான ஆதரவு தேவைப்படுகிறது.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

சுமார் 20 முதல் 25 தொகுதிகளில் கட்சி 30%க்கு அருகில் வாக்குகள் பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைப் பெறுவது இந்தத் தேர்தலில் மிகவும் சாத்தியமற்றது என்று சில தமிழ்நாட்டின் மூத்த அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்கு இருக்கும் முக்கிய கேள்வி விஜய்யால் ஆட்சி அமைக்க முடியுமா?”

நான் கண்ட ஒரு டி.வி.கே கட்சியின் முக்கிய அரசியல் ஆதரவாளரின் சமூக ஊடக பதிவு இந்த கேள்விக்கு ஓரளவேனும் திருப்திகர பதிலை தந்தது.

அதாவது,   “ஸ்டாலின் ராஜாவாகப் போகிறார் என்றால், அல்லது எடப்பாடி கே. பழனிசாமி கூட, விஜய் ராஜாவை உருவாக்குபவராக இருப்பார்” பதிவிட்டிருந்தார்.

இங்கு “ராஜா” என்றால் நேரடி அரசன் அல்ல, அதிகாரம் உள்ள தலைவன். முதன்மை நிலை என்பதைக் குறிக்கும்.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

அதாவது, ஸ்டாலின் அரசியலில் முன்னணி அதிகாரத்தை அடைகிறார் என்று பொருள்.

மேலும், எடப்பாடி பழனிசாமி (EPS) நேரடியாக “ராஜா” ஆகாமல் இருந்தாலும், விஜய் போன்ற ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை பெரிய தலைவராக உருவாக்க உதவுபவர் ஆக இருக்கலாம் என்பதாகும்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் “மூன்றாவது சக்தி” முயற்சிகள் நடந்துள்ளன. வைகோ, விஜயகாந்த் முதல் கமல்ஹாசன் மற்றும் பலர் வரை.

இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

இளம் வாக்காளர்கள் 

ஆனால் அந்த முயற்சிகள் பெரும்பாலும் வயதான எதிர்ப்பு வாக்காளர்கள், சாதி குழுக்கள் அல்லது குறிப்பிட்ட பிராந்தியப் பிரிவுகளின் ஆதரவையே பெற்றன.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

எனினும் விஜயின் வியூகம் மற்றும் ஈர்ப்பு வித்தியாசமானது.

ஒரு புதிய முகத்திற்கான ஏக்கம் எப்போதுமே தற்போதைய தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் இருப்பதை காணமுடிகிறது.

இதில் குறிப்பாக விஜய் முன்னனி பெற்றால் கடந்த ஐந்து தசாப்தங்களில் இளைஞர்களுக்கான ஒரு மாற்று முகம் உருவானது இதுவே முதல் முறை.

வைகோவுக்கோ அல்லது விஜயகாந்துக்கோ இளைஞர்களுடன் அந்தத் தொடர்பு இருக்கவில்லை. அதுதான் விஜய்யின் இந்த நிகழ்வைத் தனித்துவமானதாக ஆக்குகிறது.

டி.வி.கே-வின் ஆதரவுத் தளம் இளமையானதாகவும், நகர்ப்புறத்தைச் சார்ந்ததாகவும், பரம்பரை கட்சி விசுவாசங்களுடன் குறைந்த பிணைப்பு கொண்டதாகவும் காணப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகள் கூட ஒப்புக்கொள்கின்றன.

பழைய அரசியல் நினைவுகளே பெரும்பாலும் வாக்களிப்பை வடிவமைத்துள்ள ஒரு மாநிலத்தில், இது விஜய்யின் புள்ளிவிவரங்களைக் கணிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.

ஸ்டாலின் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் தொகுதிகளிலும், எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் பொதுக்கூட்டத்திலும், தி.மு.க எம்.பி. கனிமொழி தூத்துக்குடியிலும், தி.மு.க கூட்டணிக் கட்சியான பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலத்திலும் பிரசாரம் செய்தனர்.

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய் | Tamilnadu Elections Vijay Doubtful Farewell

மேலும், நான்கு முனைப் போட்டியை எதிர்கொண்டுள்ள காரைக்குடியில் என்.டி.கே. தலைவர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தின் பிரதான கட்சிகள் விஜய்யின் கூற்றை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் அதை நிராகரிக்கவும் இல்லை.

மேலும், இந்தத் தேர்தலில் விஜய்யின் மிக முக்கியமான சாதனை இதுவாகத்தான் இருக்கக்கூடும்.

அவரால் ஆள முடியும் என்பதை இன்னும் நிரூபிக்கவில்லை, மாறாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஏராளமான இளம் வாக்காளர்கள் தாங்கள் இயல்பாகவே சார்ந்திருப்பதாக உணரும் முதல் மாற்றுத் தலைவராக அவர் உருவெடுத்திருப்பதுதான் இங்கு காணப்படும் சாவால் மிக்க தேர்தலுக்கு காரணமாகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001