இந்தியாவின் அரண் தமிழர்கள் தான் : வலுவான ஆதரவுக்கு கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna Sri Lanka India
By Vanan Oct 08, 2023 09:11 PM GMT
Report

இந்தியாவின் அரண் தமிழர்கள் தான். இனியாவது எங்களுக்காக குரல் கொடுங்கள். இந்த நாட்டின் நீதியை நிலைநாட்டும் நீதிபதி ஒருவர் வெளியேறிய பின்னும் ஏன் மௌனம் காக்கின்றீர்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். தாவடியில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி துறப்பு

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு நீதிபதியவர்கள் எமது நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். ஒரு நாட்டினை விட்டு நீதிபதி வெளியேறுகின்றார் என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு நீதி கிடைக்கப் போகின்றது.

இந்தியாவின் அரண் தமிழர்கள் தான் : வலுவான ஆதரவுக்கு கோரிக்கை | Tamils Are The Bastion Of India Saravanapavan Pres

2023 - 2024 வடகீழ் பருவ மழைக்கான எதிர்வுகூறல்

2023 - 2024 வடகீழ் பருவ மழைக்கான எதிர்வுகூறல்

முழுப் பொறுப்பினையும் இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கமோ அல்லது நீதி அமைச்சோ இதுவரை இதற்கு காரணமாக இருக்கின்ற தரப்பிற்கு எதிராகவும் ஒரு நடவடிக்கையை கூட முன்னெடுக்கவில்லை.

இலங்கையில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளினதும் தீர்ப்புக்களுக்கும் இந்த அரசாங்கம் வழி வகுத்துக் கொடுக்க வேண்டும்.

பெரும்பான்மையினம் சிந்திக்கின்றது எதனையும் செய்யலாம், தமிழ் மக்களை விரட்டி  தாங்கள் வாழலாம், தமிழ் மக்களின் எந்தவிதமான கூட்டும் தேவையில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷ எவ்வாறு தமிழ் மக்களுடைய வாக்கு தேவையில்லை என்பதனை வென்றும் காட்டினரோ அதே பாணிக்கு தற்போதைய அதிபர் செல்வதாக தெரிகிறது.

அவருடைய ஒவ்வொரு செவ்வியை பார்த்தாலும் இது புலப்படுகிறது. உதாரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அழைத்து தன்னுடைய நியாயங்களை சொல்கிறாரே தவிர அவர்களுடைய நியாயங்களை கேட்பதாக இல்லை.

இந்தியா விரைவில் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். வேறு யாராலும் முடியாது. நிச்சயமாக பெரும்பான்மை இனம் என்றைக்கும் இந்தியாவிற்கு சார்பாக வரமாட்டார்கள் என்பதனை எடுத்துக் கூறுகின்றேன்.

ஆதரவுக்கான கோரிக்கை

ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர்

ராகு கேது பெயர்ச்சி : பணக்காரராகும் யோகம் பெறும் 04 ராசியினர்


இந்தியாவிற்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றேன், இங்கே உங்களுக்கு சார்பாக இருக்கக்கூடியவர்கள் தமிழர்கள் தான் முதல், பின்பு தான் மற்றவர்கள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் அரண் தமிழர்கள் தான் : வலுவான ஆதரவுக்கு கோரிக்கை | Tamils Are The Bastion Of India Saravanapavan Pres

எங்களுக்கு ஒரு நீதி நியாயமான வழி பிறக்க வேண்டும். தற்பொழுது எங்களுக்கு இருந்த பாதுகாப்பு இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின்னர் தாங்கள் நினைத்தவாறு பெரும்பான்மை இனத்தவர்கள் பேசுகின்றார்கள் தமிழர்களை துச்சமாக மதிக்கின்றார்கள் தமிழர்களின் நிலையை மிக மிக கேவலப்படுத்துகின்றார்கள்.

இந்தியாவில் தமிழகம் நமக்காக நிற்கின்றது. ஆனால் முழு இந்தியாவும் நமக்காக நிற்கின்ற பொழுது தான் நாங்களும் அவர்களுக்கான முழு ஆதரவினையும் வழங்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026