திருகோணமலையில் வாழ்விட உரிமை மறுக்கப்பட்ட தமிழர்கள் - தற்துணிவின்பால் 15 குடும்பங்கள் குடியேற்றம்(படங்கள்)
திருகோணமலையில் வாழ்விட உரிமை மறுக்கப்பட்ட தமிழர்கள் சிலர் தற்துணிவின்பால் தமது பூர்வீக மண்ணில் குடியேறியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
திருகோணமலை பண்குளம் 4ஆம் கண்டத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் 320 குடும்பங்களுக்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வசித்து வந்தனர்.
வாழ்விட உரிமை மறுக்கப்பட்ட தமிழர்கள்
1983 மற்றும் 1990 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு வாழ்ந்து வந்த மக்கள் சிங்கள காடையர்களால் அடித்து துரத்தப்பட்டனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் இடம்பெயர்ந்து இந்தியா மற்றும் திருகோணமலை நகரப்பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
மீண்டும் இவர்கள் தமது வாழ்விடங்களுக்கு திரும்பி வந்து வாழ்வதற்கான உதவிகளை அரச அதிகாரிகளை அணுகி கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதுடன், எவ்விதமான அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்துணிவின்பால் குடியேற்றம்
இருந்த போதிலும் தமது தற்துணிவின்பால் தாங்கள் வசித்து வந்த மற்றும் தமது மூதாதையோர் வாழ்ந்த பூமியை யாருக்கும் விட்டுக் கொடுக்காது அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது சொந்த நிலத்தில் 15 குடும்பங்கள் முதற்கட்டமாக குடியேறியுள்ளனர்.
இவர்களுக்கு வாழ்வாதார திட்டங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் முக்கிய தேவையாக காணப்படுவதாக கூறப்படுகிறது.





