வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils R. Sampanthan Sri Lanka Election
By Sathangani Mar 31, 2024 04:02 AM GMT
Report

தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை அவர்கள் அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம் என  இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான முன்னாயத்தங்களை தேசிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் ரணிலின் ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி

அதிபர் ரணிலின் ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தி

அதிபர் தேர்தலில் பொது வேட்பாளர்

”எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு தமிழ் மக்களிடத்தில் பரலவலான ஆதரவு கிடையாது. அத்துடன் குறித்த முயற்சியானது தமிழ் மக்களுக்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கும் என்றும் நான் கருதவில்லை.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு | Tamils Insisting North And East Should Be United

தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்காக ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். அவ்விதமான நிலையில் அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர்கள் சார்பில் களமிறக்கும் விடயத்தினை நான் ஆதரிக்கவில்லை.

அதேநேரம் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை இன்னமும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர்கள் அவ்வாறு அறிவிக்கின்றபோது நாம் இறுதியான தீர்மானத்தினை எடுப்போம்.

மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்

மொஸ்கோ பயங்கரம்: வெளிநாட்டு உதவியை நாடும் பிரான்ஸ்

இந்திய, இலங்கை ஒப்பந்தம்

எம்மைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று கோரிவருகின்றார்கள்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் மக்கள் : சம்பந்தன் சுட்டிக்காட்டு | Tamils Insisting North And East Should Be United

அத்துடன் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களான வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

அந்த வகையில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கோரிக்கைகளை ஆதரிப்பவர்கள் பற்றியே நாம் கருத்தில் கொள்ள முடியும்“ என தெரிவித்தார்.

தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ரணிலின் அறிவிப்பால் ஆடிப்போன அரசியல்வாதிகள்

தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ரணிலின் அறிவிப்பால் ஆடிப்போன அரசியல்வாதிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026