தமிழர் விவகாரம் - ரணிலின் கூற்றில் வெளிப்பட்ட சந்தேகம்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்களை ஏமாற்றும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், முன்னெடுக்குமாயின் அதன் விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் தீர்வை வழங்குவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளமை குறித்து தொடர்ந்தும் தமக்கு சந்தேகமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு
தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுக்களை ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையே காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
