வடக்கு மக்களின் தேவைகள் குறித்த ரணிலிடம் முன்மொழியப்பட்ட 10 கோரிக்கைகள்..!
வடக்கில் மக்களின் தேவைகளையும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் உடன் கவனம் செலுத்தி ஆவண செய்யுமாறு யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அதிபர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கடந்த மாதம் 18ம் திகதி அதிபர் மாளிகையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போதே ஆயர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
10 கோரிக்கைகள்

வடக்கு மக்களின் அத்தியாவசியப் பிரச்சினைகள், தேவைகள் பற்றி எடுத்துக் கூறும் நோக்குடனேயே இச் சந்திப்பு இடம் பெற்றது. இச் சந்திப்பின் போது யாழ் ஆயர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்மொழிந்த கோரிக்கைகளாவன,
- வடக்கில் தமிழ் மக்களின் வாழ் நிலங்களும், விளை நிலங்களும் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை உடன் விடுவித்து மக்கள் சுதந்திரமாக தம் சொந்த மண்ணில் வாழ விடுங்கள்.
- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அழுகுரலுக்கு செவிமடுத்து, அவர்களுக்கு ஆறுதல் வழங்க உடன் நடவடிக்கை எடுங்கள்.
- போர்க் குற்றங்களுக்காக நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டோர் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.
- வடக்கின் உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாமையால் இளம் ஆண், பெண் பிள்ளைகள் தம் மேற்கல்வியை தொடர முடியாத அவல நிலையில் உள்ளனர்.அவர்கள் உயர்கல்வியை தொடர வாய்ப்பை ஏற்படுத்தி உயர்கல்வி நிறுவனங்களை வடக்கில் ஆரம்பியுங்கள்.
- வேளாண்மை வடக்கின் பிரதான தொழிலாகும். வேளாண்மை தொழிலை வடக்கில் அபிவிருத்தி செய்யுங்கள்.
- நோர்வேயின் முன்னால் அமைச்சர் மீன்பிடி படகுகள் உற்பத்தியை வடக்கில் ஆரம்பிக்க அனுமதியளியுங்கள், அதன் வழியாக எம் இளையோர் வேலைவாய்ப்பு பெறும் சாத்தியம் அதிகம் ஏற்படும்.
- கிளிநொச்சியில் மிளகாய் செய்கையை அதிகரிக்க உதவுங்கள். இதன் வழியாக மிளகாயை இறக்குமதி செய்யப் பயன்படும் பெரும்தொகை அமெரிக்க டொலர்கள் மிகுதியாகும்.
- அதே போல் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, இந்திய யுஆருடுநிறுவனத்தின் அனுசரனையுடன் வெண்ணை மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை கூடுதலாக உற்பத்தி செய்ய உதவுங்கள்.
- பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு அனுமதியுங்கள்.
- காங்கேசந்துறை துறைமுகத்தின் ஊடாக இந்திய போக்குவரத்தை ஆரம்பித்து தென்னிந்தியாவிற்கு மக்கள் யாத்திரை மேற்கொள்ளவும், மக்கள்பொருட்களை கொண்டுவரக்கூடிய வகையில் அதன் பாவனையை மேம்படுத்துங்கள்.
மேற்கூறப்பட்ட விடயங்களை உடன் கருத்தில் எடுத்து வடக்கு கிழக்கு மக்கள் அமைதியான வாழ்வு வாழ வழிசமைக்குமாறு ஆயர் அவர்கள் இச் சந்திப்பின் போது அதிபரிடம் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .