இது உங்கள் அம்மாவின் சொத்தா! ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கு தமிழர் தரப்பு பதிலடி
வவுனியா வடக்கு, திரிவைச்சகுளம் பகுதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதான குற்றச்சாட்டுகள் தற்போது வலுத்துள்ளன.
இதற்கு வவுனியா வடக்கு பிரதேச செயலகம் துணைபோவதாக முன்னதாக கவலை தெரிவிக்கப்பட்ட நிலையில், சில தமிழர் தரப்புக்களின் நடவடிக்கையால் தற்போது அந்த நிலங்களை விட்ட வெளியேற சிங்கள மக்களுக்கு உத்தரவிடப்பட்டதாக அறிய முடிகிறது.
எனினும் இந்த விடயத்தை எதிர்த்து இனவாதத்தை கக்கும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் "நிலம் என்ன உங்கள் அம்மாவின் சொத்தா” போன்ற கருத்துக்கள் தமிழ் தரப்புக்களின் எதிர்ப்பையும், முகம் சுழிக்கும்படியான வாதங்களையும் எழுப்பியுள்ளன.
இந்நிலையில் 2020இல் தமது காணிகளை மீட்க முயன்ற தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். 2023இல், ஆக்கிரமிக்கப்பட்ட திரிவைச்சகுளம் நிலங்கள் "அந்தர்வெவ" எனும் பெயரில் சிங்கள கமக்கார அமைப்பால் பதிவு செய்யப்பட்டு, 38.25 ஏக்கர் வயல் நிலங்களுக்கு பிரதேச செயலகத்தால் பத்து பங்காளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.
2024இல், மேலும் 83 ஏக்கர் 23 பங்காளர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு கிராம சேவகர் சுபாஸ் மற்றும் அப்போதைய பிரதேச செயலாளர் கலாஞ்சலி ஆகியோரின் கையொப்பங்கள் உள்ளதாக முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டன.
ஆனால், கிராம சேவகர் தனக்கு விவரங்கள் நினைவில்லை எனவும், பிரதேச செயலாளர் காணிகள் மகாவலி அதிகாரத்தின் கீழ் உள்ளதால் தமக்கு தொடர்பில்லை எனவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தமிழரின் காணிகள் பறிபோகும் அவலத்தின் பின்னணியில் திரிவைச்சகுளம் பகுதியில் தற்போது வலுத்துள்ள சர்ச்சை தொடர்பில் எமது ஊடகம், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனிய மாவட்ட அமைப்பாளர் தவபாளனை தொடர்புகொண்ட போது அவர் தெரிவித்த கருத்துக்கள் சில உண்மைகளை விளக்கியுள்ளன...
