இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி

Tamils Ampara Mullivaikal Remembrance Day Sri Lanka Kaveenthiran Kodeeswaran
By Independent Writer May 18, 2026 09:06 AM GMT
Report

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்று (18) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வும் கஞ்சி விநியோகமும் இன்று(18) இடம்பெற்றது.

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

 

நினைவேந்தலில் கலந்துகொண்டோர்

இந்த நிகழ்வில், கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ.ரூபசாந்தன், காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில், சமுக செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.    

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோடீஸ்வரன் “மே 18முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து இன்றுடன் 17ஆண்டுகள் கடந்த நிலையிலும், எங்களது மனதிலிருந்து இந்த கவலைகள், வடுக்கள், ஆறாரணங்கள் மாறப்போவதில்லை.

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி | Tamils Should Be Ruled By Tamils In Sri Lanka

தமிழினப் படுகொலையானது திட்டமிடப்பட்ட வகையிலே இலங்கை அரசாங்கத்தோடும், சர்வதேச நாடுகளின் பக்கத்துணையாகவும் நின்று செயற்படுத்தப்பட்டதை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.​

எந்த நோக்கத்திற்காக இந்த மக்கள் முள்ளிவாய்க்காலிலே உயிர் நீத்தார்களோ, அந்த நோக்கத்தை அடைகின்றவர்களாக, அந்த நோக்கத்தைப் பெறுகின்றவர்களாக நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இலட்சக்கணக்கான மக்கள் இந்த மண்ணிலே வித்தாகி இருக்கின்றார்கள். இலட்சக்கணக்கான போராளிகள் இந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்றார்கள். அவர்களது எண்ணத்தையும் சிந்தனையும் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.​

விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலைக்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலைக்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 சர்வதேச சமூகத்திடம் நீதி கோரல் 

இந்த 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், எங்களது தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் இன்று சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி நிற்கின்றோம்.

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி | Tamils Should Be Ruled By Tamils In Sri Lanka

​2009-ஆம் ஆண்டு ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், எங்களது அரசியல் ரீதியான முன்னெடுப்புகள், தமிழர்களின் உரிமையைச் சார்ந்து, தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுத்து நாங்கள் சர்வதேச நாடுகளுக்கும் ஏனைய அமைப்புகளுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுப்போம்.

எங்களது விடிவு கிடைக்கும் வரை நாங்கள் அந்தத் தொடர்ச்சியான அழுத்தங்களை சர்வதேசத்திற்குக் கொடுத்து நிற்போம் என்கிற இந்த செய்தியையும் இந்த இடத்திலே கூறிக்கொள்கின்றேன்.

தமிழர்கள் தமிழர்களை ஆள வேண்டும் என்கின்ற அந்த ஒரேயொரு தேவைப்பாட்டைத்தான் நாங்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கின்ற ஒரு கோரிக்கையாக இருக்கின்றது என்பதனை இந்த இடத்திலே தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன்“ என தெரிவித்தார்.      

முள்ளிவாய்க்கால் பேரவலம் - 2026 : தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு கொள்கைப் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் பேரவலம் - 2026 : தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு கொள்கைப் பிரகடனம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026