இறைவரித் திணைக்களத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வெற்றி
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தனிநபர் முன்கூட்டிய வருமான வரியை (Personal Advance Income Tax) அரவிடுவது குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எடுத்திருந்த தீர்மானத்தை இரத்து செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் சான்றாணை (Certiorari) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தால் முன்வைக்கபட்ட குற்றச்சட்டுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ள ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்கள், தத்தமது அணித் தலைவர்கள் ஊடாக நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ஊழியர்களுக்கான வரி விதிமுறை
தாங்கள் இலங்கை கிரிக்கெட்டின் ஊழியர்கள் அல்ல என்றும், பல ஆண்டுகளாக சுயாதீன சேவை வழங்குநர்களாகவே அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் வீரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டினர்.

எனவே, தங்களிடம் அறவிடப்படும் வரியானது ஊழியர்களுக்கான வரி விதிமுறைகளின் கீழ் அல்லாமல், சுயாதீன சேவை வழங்குநர்களுக்குப் பொருந்தும் சட்ட விதிகளின் அடிப்படையில் அறவிடப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.
இதன்படி இலங்கையின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எதிர்காலத்தில் சட்டரீதியாக மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தீர்மானத்திற்கும் இந்தத் தீர்ப்பு தடையாக அமையாது என நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
யாழில் ஓய்வுபெற்ற அதிகாரியின் வீடு புகுந்து தாக்குதல் - பின்னணியில் அரசியல் அழுத்தம்.! NPP உறுப்பினருக்கு உடனடி பிணை
EPDP இன் பங்காளிகளான சுமந்திரன் தரப்பிற்கு தமிழ் தாய்மார்களுடைய கண்ணீர் பயணத்தில் கரம் கொடுக்க மனம் வராதுதான்
அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு