மக்களுக்கு வழங்கப்படவுள்ள வரிச்சலுகைகள் : நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதத்தை எட்டியப் பின்னர் நாட்டு மக்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரிச்சலுகை
இந்த நிலையில் வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய காலத்தைத் துல்லியமாக கூற முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் இலக்கை விரைவாக எட்ட முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக 7% சலுகை வட்டியுடன் கடன் வழங்கப்படவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று (18) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |