யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி

By Sathangani Mar 28, 2025 06:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்தமைக்காக ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், “குறித்த பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (26) பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சை விடைத்தாள்கள் சக மாணவர்களைக் கொண்டு ஒருவர் மாறி ஒருவரால் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பௌத்த பிக்கு...! அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பௌத்த பிக்கு...! அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்

விடைத்தாள் திருத்தம்

இதன்போது பாதிக்கப்பட்ட குறித்த மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Arrested For Exam Answer Sheet Issue

அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதை குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை வழங்கியுள்ளார்.

இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன் கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரி பிரதேச சபை : அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை

சாவகச்சேரி பிரதேச சபை : அர்ச்சுனா எம்.பி விடுத்த கோரிக்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

மேலும், குறித்த மாணவி, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Arrested For Exam Answer Sheet Issue

இந்த நிலையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் தமிழரசுக் கட்சி மூத்த தலைவரின் மகள் திடீர் மறைவு

யாழில் தமிழரசுக் கட்சி மூத்த தலைவரின் மகள் திடீர் மறைவு

பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலை

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ் பாடசாலையில் பரீட்சை விடைத்தாள் திருத்தத்தில் சர்ச்சை : ஆசிரியருக்கு நேர்ந்த கதி | Teacher Arrested For Exam Answer Sheet Issue

இதனையடுத்து நேற்று (27) மாலை குறித்த வகுப்பில் கல்வி கற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர்.

பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை காவல் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆசிரியரை காவல்துறை காவலில் வைத்துள்ள நிலையில் இன்றைய தினம் (28) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவுக்கு தடை விதிக்காத பிரித்தானியா : விமல் வீரவன்ச கேள்வி

சரத் பொன்சேகாவுக்கு தடை விதிக்காத பிரித்தானியா : விமல் வீரவன்ச கேள்வி

செய்திகள் - த.பிரதீபன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், கிளிநொச்சி

15 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019