எட்டுவயது சிறுமி வன்புணர்வு -ஆரம்பபிரிவு ஆசிரியர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
எட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் எனத் தெரிவித்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் ஆசிரியரே புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டவராவார்.
ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது

குறித்த பாடசாலை மாணவி ஒருவர் ஹட்டன் குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம், ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த உள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
மரண அறிவித்தல்