வீட்டுவேலை செய்யவில்லை -இரண்டாம் வருட மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்
வீட்டு வேலை செய்யாத காரணத்தால் இரண்டாம் தர மாணவன் ஒருவரை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாத்தாண்டிய, கொஸ்வத்தையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவன் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை காவல் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

தாக்குதலுக்கு உள்ளான ஏழு வயது மாணவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட காவல்துறைஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்கப்பட்ட மாணவனின் முதுகில் பல காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆசிரியரை கைது செய்வதற்கான விசாரணை

தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மாணவனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.