விஸ்வரூபம் எடுக்கும் வடக்கில் ஆசிரியர் இடமாற்றம் :யாழ்.மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல்
வடக்கு மாகாணக்கல்வித்திணைக்களம் 01.01.2026 முதல், சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் 290 ஆசிரியர்களை தரவுகள் எவையுமின்றி, முறையற்ற விதமாக இடமாற்ற தீர்மானித்தற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி M .A.சுமந்திரனால் பாதிக்கப்பட்ட ஆசியர்களுக்காக, இலங்கை ஆசிரியர் சங்கம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணம்
குறித்த மனு தொடர்பில், இன்று(21) மாலை 2மணியளவில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரனால் சமர்ப்பணம் முன் வைக்கப்பட்ட நிலையில் வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது .
இதன் அடிப்படையில் 2025.11.10 ஆம்திகதியன்று இந்த மனு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம்
குறித்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதேவேளை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் அனுப்பிய விளக்க கடிதம், ஆளுநர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
