அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆசிரியர் இடமாற்றம் : ஆளுங்கட்சி எம்.பி குற்றச்சாட்டு

Vavuniya Sri Lanka Teachers National People's Power - NPP
By Sathangani Dec 27, 2024 08:57 AM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி (NPP) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா - செட்டிகுளத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விவசாயிகளுக்கான ஊக்குவிப்பு தொடர்பில் வடக்கு ஆளுநரின் தீர்மானம்!

விவசாயிகளுக்கான ஊக்குவிப்பு தொடர்பில் வடக்கு ஆளுநரின் தீர்மானம்!

ஆசிரியர் பற்றாக்குறை

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. நகர்ப்புற பாடசாலைகள் பலவற்றில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் உள்ளனர். ஏன் நகர்ப்புறப் பகுதியில் உள்ள ஆசிரியர்களை பின்தங்கிய பிரதேசத்திற்கு அனுப்ப முடியாமல் உள்ளது.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆசிரியர் இடமாற்றம் : ஆளுங்கட்சி எம்.பி குற்றச்சாட்டு | Teacher Transfer Using Political Influence Vavuniy

செட்டிகுளம் பிரதேசத்தில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் 8 வருடம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாது உள்ளனர். ஆனால் நகர்ப்புறப் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கே சுழற்சி முறையில் இடமாற்றமாகி செல்கின்றனர்.

ஏன் அந்த ஆசிரியர்களை தூரப் பிரதேசங்களுக்கு அனுப்பக் கூடாது. தொடர்ச்சியாக தூரப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் விமோசனம் கொடுக்கக் கூடாது.

இங்கு கூடுதலான அதிகாரிகள் நகர்ப்புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.

ஆயுதப்படைக்கு அநுரவின் அதிரடி உத்தரவு : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

ஆயுதப்படைக்கு அநுரவின் அதிரடி உத்தரவு : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

ஜனவரி 7ஆம் திகதி வவுனியா தெற்கு வலயத்தின் உள்ளக இடமாற்றம் இடம்பெற இருக்கின்றது. அதில் இது தொடர்பில் கவனம் செலுத்தி சரியான முறையில் இடம்பெற வேணடும்.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆசிரியர் இடமாற்றம் : ஆளுங்கட்சி எம்.பி குற்றச்சாட்டு | Teacher Transfer Using Political Influence Vavuniy

செட்டிகுளம் கோட்டத்தில் பாரிய ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகின்றது. நகர்ப்புறத்தில் தொடாந்தும் பணியாற்றும் ஆசிரியர்களை கொண்டு அந்த பற்றாக்குறையை நிரப்ப வேண்டும் எனக் கேட்கின்றேன். அத்துடன் இடமாற்றம் தொடர்பான விடயங்களையும் எம்மிடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

வவுனியா தெற்கு வலயத்தில் ஆசிரியர் பற்றக்குறை தொடர்பான விபரத்தை தர வேண்டும். புதிதாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு நியமனம் வழங்கப்படவுளளது.

நாம் வடக்கு மாகாண ஆளுநருடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசி இங்குள்ள ஆசிரியர் பறறாக்குறையை நிரப்ப முடியும்“ என தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றுங்கள் - சிறீதரன் எம்.பி கோரிக்கை

தமிழர் பகுதியில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றுங்கள் - சிறீதரன் எம்.பி கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016