யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம்

Jaffna Ceylon Teachers Service Union Teachers
By Thulsi Jan 19, 2025 03:37 AM GMT
Report

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் தொடர்ச்சியான போராட்டத்தையும் யாழ்ப்பாண நகரத்தில் ஊர்வலத்தினையும் முன்னெடுப்பதற்கு இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் தயாராகி வருவதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிறிகந்தனேசன் புயல்நேசன் (Srikanthanesan Puyalnesan) தெரிவித்துள்ளார்.

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்றையதினம் (18) யாழ்ப்பாணம் - மாம்பழம் சந்தியில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் ஆண்டு தோறும் இடமாற்றம் நடைபெறுகின்றது. இவ்வாறு நடைபெற்றாலும் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களிலே பணி செய்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் !

கிளிநொச்சியிலிருந்து ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் !

உள நெருக்கடி மற்றும் பாதிப்பு 

யாழ்ப்பாணத்திலும் (Jaffna) ஏனைய மாவட்டங்களிலும் ஐந்து வெளிமாவட்ட சேவையை நிறைவு செய்த ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர்.

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம் | Teachers Transfer Issue And Sick Leave Protest

இருப்பினும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள், வெளிமாவட்ட சேவையை 8 அல்லது 10 வருடங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் உள நெருக்கடிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்கள்.

இடமாற்ற சபையிலே தீர்மானம் எடுக்கப்படுகின்றபோது தேசிய இடமாற்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அதற்கேற்ப இந்த இடமாற்றம் வழங்கப்படுவதில்லை.

இலங்கை நிதியமைச்சருக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம் !

இலங்கை நிதியமைச்சருக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம் !

அரசியல் சார்பான நடவடிக்கைகள் 

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களிலும் ஒரு அரசியல் சார்பான நடவடிக்கைகள் இடம்பெற்றன. இப்போது இருக்கின்ற அரசாங்கம் தங்களுக்கு சார்பானவர்களை பெரிய பெரிய பதவிகளில் அமர்த்துவதுடன், அரசியல் சார்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம் | Teachers Transfer Issue And Sick Leave Protest

இடமாற்றத்திலேயே அரசியல் சார்பான தொழிற்சங்கங்கள் செயற்பட்டு கொண்டு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள். வடக்கு மாகாணத்தில் அண்ணளவாக 17 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்

இவற்றில் 80 சதவீதமானவர்கள் பெண் ஆசிரியர்கள். அவர்கள் மடு, முல்லைத்தீவு, துணுக்காய் வவுனியா வடக்கு - தெற்கு போன்ற அதி கஷ்ட பிரதேசங்களில் மிகவும் இன்னல்களை சந்திக்கின்றனர்.

இவர்கள் ஒரு தசாப்தத்திற்கு மேலாக வழி மாவட்டத்தில் வேலை செய்கின்ற போதும் வாழ்வியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று தற்போது நாட்டில் சனத்தொகை பற்றாக்குறை.

இடமாற்ற பிரச்சனையில் செல்வாக்கு

இந்த விடயத்தில் இடமாற்ற பிரச்சனையும் செல்வாக்கு செலுத்துகின்றது. தற்போது இருக்கின்ற அரசாங்கம் அரசியல் ரீதியான நியமனத்தை வழங்குவதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

யாழில் போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம் | Teachers Transfer Issue And Sick Leave Protest

கடந்த 2021 ஆம் ஆண்டு வரலாற்றில் பேசப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றத்தை பெற்றுக் கொடுத்தோம்.

இன்றில் இருந்து 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து ஒரு சுகயீன விடுமுறை போராட்டத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகத்தின் முன்னால் முன்னெடுப்பதோடு, யாழ்ப்பாண நகரில் ஒரு வீதி ஊர்வலத்தையும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார். 

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025