கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் ஆசிரியர் சங்கம்!
Colombo
Teachers
SriLanka
Joseph Stalin
Teachers Union Struggle
By Chanakyan
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்ட காலமாக நியமனம் வழங்கப்படாமையை கண்டிக்கும் வகையில் நாளையதினம் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக, இந்த நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 300இற்கும் அதிக ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ள போதிலும், இந்த நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், குறித்த ஆசிரிய உதவியாளர்களுக்கு உடனடி நியமனத்தை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
