வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு
புதிய இணைப்பு
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வனவள திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத முறையில் கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகளினை மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
வனவளத்திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து மாவட்ட வனவள திணைக்கள அதிகாரி அஜித் ஜயசிங்கவின் நெறிப்படுத்தல் இன் கீழ் வட்ட வனவள அதிகாரி உடார சஞ்சீவவின் தலைமையிலான வனவள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருநதனர்.
இந்நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப் ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது.
இதேவேளை, வவுனியாவில் உள்ள மரக்காளையில் இருந்து அனுமதி பெறப்படாத 13 இலட்சம் பெறுமதியான தேக்கு மர பலகைகள் மீட்கப்பட்டதுடன், பறயநாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது. குறித்த சம்பவங்கள் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கருங்கல்லு சல்லிக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (07.06.2025) இடம்பெற்றுள்ளது.
ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி குறித்த மரக் குற்றிகளை கொண்டு வந்தபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
15 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்கம் குற்றிகளை டிப்பரின் கீழே மறைத்து வைத்துவிட்டு சல்லியை ஏற்றி வந்தபோது, சாவகச்சேரி காவல்துறை நிலைய உப காவல்துறை பரிசோதகரான மயூரன் மற்றும் கொஸ்தாபல் நிருபன் ஆகியோர் அந்த டிப்பரை சோதனையிட்டனர்.

இதன்போது அதில் மரக்குற்றிகள் ஏற்றி வந்தமை தெரிய வந்துள்ளது.
கைது நடவடிக்கை செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |