நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிட தயார்! சபையில் வட்டகல கிண்டல்
தனக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தப் பின்னர் நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிடுவேன் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வதாக மொட்டுக்கட்சியின் நாாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார் என்றும் வழக்குத்தாக்கல் செய்யும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த அவர்,
விசாரணை
விசாரணைகளுக்கு அழையுங்கள் தைரியமாக வருகிறோம் என்று குறிப்பிட்ட நாமல் தற்போது விசாரணைக்கு செல்லும் போது ஆட்களை தேடித் திரிகிறார்.

எனக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்வதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஆனால் இன்றுவரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.
வழக்குத்தாக்கல் செய்யும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது தான் நாமலின் மானம் பற்றி பல விடயங்களை குறிப்பிடுவேன்.
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை பௌத்தம் மதம் உட்பட சகல மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார்.
தோற்றுவிக்க முயற்சி
மதத்தை முன்னிலைப்படுத்தி தோற்றுவிக்க முயற்சித்த முரண்பாடுகளுக்கு சட்டத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதனையும் ஒரு தரப்பினர் தங்களின் இனவாத செயற்பாடுகளுக்கு சார்பாகவே பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
பாதாளக்குழு தலைவர் கெஹல்பத்தரே பத்மேவுடன் கொண்டிருந்த தொடர்புப் பற்றி வாக்குமூலமளிப்பதற்கு நாமல் அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.
பரிவாரங்களுடன் குற்றப்புலனாய்வுக்கு வந்த நாமல் வாக்குமூமலளித்ததன் பின்னர் நாமல் 323 கொள்கலன்கள் எங்கே என்று கேள்வி கேட்கிறார்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |