மாவத்தகமவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!
Accident
Death
By Pavi
மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந்துள்ளது.
மாவத்தகமவிலிருந்து அகஸ்யனபிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் பலி
விபத்துக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதன் பின்னர் குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவத்தகம காவல்துறை மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்