திடீரென காணாமற்போன இளைஞன் -பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Missing Persons
Sri Lankan Peoples
By Sumithiran
வத்தளையில் காவல்துறை நிலையத்திற்கு முன்பாக நிறுவனமொன்னறில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இ.பி.கசுன் சம்பத் என்ற 29 வயதுடைய இளைஞனே காணாமல்போயுள்ளார் என்று காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திடீரென மாயமானார்
குறித்த இளைஞன் பணிபுரிந்து கொண்டிருந்தநிலையில் கடந்த 12ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானார் என்று வத்தளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளைஞளை யாராவது கண்டால்
இந்நிலையில், குறித்த இளைஞளை யாராவது கண்டால் உடனடியாகப் காவல் நிலையத்துக்கு அல்லது 0766689959, 0772190251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
