நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகிறதா? வெளிவந்த தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஒட்டுக்கேட்பதற்கு தொழிநுட்ப வசதிகள் எம்மிடத்தில் இல்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.
அரசதலைவரது ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஒட்டுக்கேட்கும் அல்லது இரகசியமாக பதியும் எந்தவித செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினரோ அல்லது புலனாய்வுத்துறையோ முன்னெடுக்கவில்லை.
அத்துடன் ஒரு சில நேரங்களில் சில விசாரணைகளுக்காக தகவல்கள் அவசியப்படும் பட்சத்தில் நீதி மன்றத்திற்கு அவற்றை ஒப்படைக்க வேண்டியுள்ள சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் வழங்கும் கட்டளைக்கு அமைய குறித்த சேவை வழங்குனரின் அனுமதியுடன் இவற்றை நாம் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.