ரெலோ கட்சி அதிகாரிகளின் பதவிக்காலம் : தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு
தமிழ ஈழ விடுதலை இயக்கக் (TELO) கட்சியின் திருத்தப்பட்ட யாப்புத் தொடர்பாகவும், கட்சியின் அனைத்து அதிகாரிகளினதும் பதவிக்காலம் நிறைவடைவது தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளது.
இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் பி.பீ.சி. குலரதீன தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், 2026.03.24 ஆந் திகதி தமிழ ஈழ விடுதலை இயக்கக் (TELO) கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் ஏனைய பதவிதாங்குநர் குழுவின் தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், எவ்விதமான பதவிக்கால நீடிப்பையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோருதல்.
தேர்தல் ஆணைக்குழு
மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக திரு. பீ. ஹான்ஸ் குமார் அவர்களினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 2026.02.25 ஆந் திகதிய கடிதத்துடன் தொடர்பானது.

2. குறித்த கடிதத்தின் இணைப்பாக, 2024.03.23 ஆதி திகதி திருத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற யாப்பும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளதுடன், கட்சியின் 11 வது மாநாடு 2024.03.24 ஆந் திகதி நடாத்தப்பட்டதாகவும், அதன்போது தெரிவு செய்யப்பட்ட தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிதாங்குநர் குழுவின் பதவிக்காலமானது கட்சியின் யாப்பிற்கு இணங்க 2026.03.23 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. 2024.03.23 ஆம் திகதி திருத்தப்பட்ட யாப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், திருத்தப்பட்ட யாப்புத் தொடர்பாகவும், தாங்கள் உட்பட கட்சியின் அனைத்து அதிகாரிகளினதும் பதவிக்காலம் நிறைவடைவது தொடர்பாகவும் தெளிவுபடுத்தல் ஒன்றை விரைவாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு தயவன்புடன் அறியத்தருகின்றேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |