நாளையதினம் சுட்டெரிக்கப்போகும் வெயில்
Sri Lankan Peoples
Department of Meteorology
Weather
By Jaso
நாளை (09) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய மட்டத்தில் தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்ட ஆலோசனைகள்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்