இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை : முதலிடத்தில் பொலன்னறுவை
இலங்கையில் பதிவாகியுள்ள வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொனறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.
குறைந்தபட்ச வெப்பநிலை
நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியிருந்தது.
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |