எல்லை மீறிய வெப்பநிலை: 08 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத அதிகரிப்பு
08 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு நாட்டின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார்.
பல்வேறு காலநிலை காரணங்களால் இந்த ஆண்டு வெப்பம் அதிகரித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை
கடந்த 2016 ஆம் ஆண்டுதான் இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவானது. இந்த நாட்டில் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் பேராசிரியர் திலக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதன்படி, இதனை சமாளிக்க மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |