வெளிநாட்டுப் பணியாளர்கள் குறித்து கனடா அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு
கனடாவில் (Canada) வெளிநாட்டுப் பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில் கனடாவில் நிலவிய பணியாளர் தட்டுப்பாடு காரணமாக கனேடிய நிறுவனங்கள் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை தாராளமாக பணிக்கு அமர்த்த அனுமதித்தது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு.
ஆனால், அனுமதிக்கப்பட்டதை விட கனடாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டதாகக் கூறி அத்திட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்க தற்போது அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்
இது குறித்து பேசிய தொழில்துறை அமைச்சரான ராண்டி போயிசோனால்ட் (Randy Boissonnault), உயர் அபாய துறைகளில் வெளிநாட்டுப் பணியாளர்களை பணிக்கமர்த்த கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும் சில துறைகளில் மொத்தமாகவே வெளிநாட்டுப் பணியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு பணிக்கு அமர்த்த தடை விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் போது செலுத்த வேண்டிய 1,000 டொலர்கள் கட்டணத்தை உயர்த்துவது முதலான விடயங்கள் குறித்து திட்டமிட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்துறை கூட்டமைப்பு
இதற்கிடையில், கனேடிய தனியார் தொழில்துறை கூட்டமைப்பின் தேசிய விவகாரங்கள் அமைப்பின் தலைவரான Christina Santini (கிறிஸ்டினா சாந்தினி) கருத்து தெரிவிக்கையில், “இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலியிடத்துக்கு தகு திவாய்ந்த கனேடிய பணியாளர் கிடைக்கவில்லையென்றால் அந்த இடத்துக்கு வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதற்காக கொண்டுவரப்பட்டது.
ஆனால், சில மோசமான நடிகர்கள் இந்த விடயத்தைப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்து ஆட்களை பணிக்கு அழைத்துவருகிறார்கள் அதைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை விதிக்க இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |