கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பதிலாக தற்காலிக இணையத்தளம்
Ministry of Education
Sri Lanka
Hackers
Cyber Attack
By Sathangani
இணையத்தள தாக்குதலுக்கு உள்ளான இலங்கை கல்வி அமைச்சின் இணையத்தளத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த, சைபர் பாதுகாப்பு குறைபாடு மூலம் கல்வி அமைச்சின் இணையதளத்தை தாக்குபவர் அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.
புதிய இணையத்தளம்
இதேவேளை சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளத்திற்கு பதிலாக அனைத்து தரவுகளையும் கொண்ட புதிய இணையத்தளம் ஒன்று நிறுவப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளம் தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி