நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் குதித்த அரச ஊழியர் சங்கம்
அனைத்து தற்காலிக பணியாளர்களையும் உடனடியாக நிரந்தர பணியாளர்களாக நியமனம் உறுதி செய்யக்கோரி ஒருங்கிணைந்த அரச ஊழியர் சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு (Ministry of Transport and Highways) முன்பாக இன்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு சுமார் ஆயிரம் சாதாரண பணியாளர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர், இந்த தொழிலாளர்கள் தற்போது ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்தும் அலட்சியம்
அதன்படி, இந்த தொழிலாளர்களை தொடர்ந்து நியமனம் செய்வதில் அமைச்சின் அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தியதால் நெடுஞ்சாலைத்துறை அமைச்சில் பணிபுரியும் சாதாரண தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், போராட்டம் தோல்வியடைந்ததையடுத்து அதன் இரண்டு முக்கிய நுழைவாயில்களை மறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |