பத்து மணிநேர மின் வெட்டு... வெளியான உண்மைத் தகவல்
Power cut Sri Lanka
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையில் தற்போது நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் நுரைச்சோலை மின் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால் எதிர்வரும் வாரம் முதல் நாட்டில் 10 மணித்தியாலங்கள் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
