சிறிலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
SriLankan Airlines
Nimal Siripala De Silva
Sri Lanka
By Shadhu Shanker
சிறிலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் இன்று (05) கோரப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “விலைமனுக்களை இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமர்ப்பிக்க முடியும்.
ஏலங்களை சமர்ப்பித்தல் நேரலையில் செய்யப்பட உள்ளதுடன் அதற்கு ஒரு சிறப்பு தொழில்நுட்ப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புக்கான விலைமனு கோரல்
விலைமதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த பின்னர் அது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் சிறிலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனவும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி