சிறிலங்கா இராணுவத்தின் நினைவிடத்திற்கு சென்ற விமலுக்கு நேர்ந்த கதி!
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இன்று (18) பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், இந்த தேசிய போர்வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செலுத்த முயன்றபோதே இப்பதிற்ற நிலை உருவாகியுள்ளது.
நாளை (19) நடைபெறவிருக்கும் தேசிய போர்வீரர்கள் நினைவுத் தின விழாவிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அவரது குழுவினரை நினைவிடத்திற்குள் நுழைவதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
தரையில் விழுந்த விமல்
இதன்போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் ஒன்று உருவானதுடன், காவல்துறையின் உத்தரவுகளையும் மீறி விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் நினைவிடத்திற்குள் நுழைய முயன்றனர்.

எவ்வாறாயினும், அவர்கள் எவரையும் போர்வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் செல்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், காவல்துறையினரை கடந்து விமல் வீரவன்ச ஓட முற்பட்ட போது கால் தடுக்கி தரையில் விழுந்தது காணொளிகளில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |