போராட்டத்தில் ஈடுபட்ட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Sri Lanka Police Anuradhapura SL Protest Sri Lanka Police Investigation
By Sathangani Nov 07, 2026 11:08 AM GMT
Report

புதிய இணைப்பு

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை குறித்த பகுதியில் உடனடியாக வெளியேறுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் IX ஆம் அத்தியாயத்தின் 106 (1) ஆம் பிரிவின் கீழ், அவசர சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்காக தற்காலிகமாகப் பிறப்பிக்கப்படும் கட்டளையாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் உதித நிசாந்த ஆகியோருடன் தங்கியுள்ள அனைத்துப் பௌத்த துறவிகளும் ஏனைய நபர்களும் அங்கு அமைத்துள்ள தற்காலிகக் கூடாரங்களை அகற்றிவிட்டு, இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னர் புனிதப் பகுதி வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவு

எனினும், குறித்த வளாகத்திலிருந்து அமைதியான முறையில் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டபோதிலும், அவர்கள் வெளியேறாமல் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், ருவன்வெலிசாயவை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதாகவும் அனுராதபுரம் தலைமையக காவல்துறை பரிசோதகரினால் நீதிமன்றத்தில் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Tense Situation Near Ruwanweli Maha Seya

குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, ருவன்வெலிசாய மற்றும் ஸ்ரீ மகா போதி உள்ளடங்கலாக முழுப் புனிதப் பகுதி வளாகத்திலிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேற வேண்டும்.

மேலும், புனிதப் பகுதியிலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு எவ்வித சேதமோ அல்லது அழிவோ ஏற்படுத்தக் கூடாது என்றும், அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நீதிமன்றத்தினால் வேறு விதமான உத்தரவு பிறப்பிக்கப்படாத பட்சத்தில், இன்றைய தினம் முதல் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என நீதவான் தனது கட்டளையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அமைதியின்மை : இருவர் அதிரடி கைது

அநுராதபுரம் - ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக பலாங்கொட கஸ்ஸப தேரர் தலைமையிலான சில பிக்குகள்  கூடி சத்தியாக்கிரகம் ஒன்றை முன்னெடுத்த நிலையில் அதனை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் 

இதன்போது அங்கு காவல்துறையினருக்கும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Tense Situation Near Ruwanweli Maha Seya

இந்தநிலையில் சத்தியாகிரக போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புனிதபூமி திட்டத்தால் பூர்விகமாக வாழும் மக்கள் எவரும் தன்னிச்சையாக வெளியேற்றப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் புனிதபூமி திட்டத்தில் பிற மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை : அமைச்சர் அறிவிப்பு

யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை : அமைச்சர் அறிவிப்பு

இராணுவ வசமுள்ள யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை காணி - சபையில் எம்பி கோரிக்கை

இராணுவ வசமுள்ள யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை காணி - சபையில் எம்பி கோரிக்கை

கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்

கொழும்பில் 49 நிமிடங்களில் கொட்டித்தீர்த்த மழை : வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025