வீதிக்கு இறங்கிய சம்பூர் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள்
புதிய இணைப்பு
திருகோணமலை - சம்பூர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறுக் கோரி பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றைய தினம் (26.05.2025) பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
சம்பூர் மகா வித்தியாலயத்தில் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், உள்ளிட்ட 6 முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்துதருமாறு கோரியே இவ் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு மூதூர் வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தேவதாஷ் ஜெயந்தன் வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினார். அத்தோடு ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடியுமான ஏற்பாடுகளை செய்து தருவதாக தெரிவித்ததை எடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு - பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் (Ministry of Education) பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் குழுவொன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (26.05.2025) கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
