சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் மீது தேரர் கொடூர தாக்குதல்
நடைபெறவுள்ள சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் தனது தோழியுடன் விகாரைக்கு சென்ற நிலையில் அவர்கள் இருவர் மீதும் குறித்த விகாரையின் விகாராதிபதி கடுமையாக தாக்கியதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
தேரரின் தாக்குதல் காரணமாக நாளை திங்கட்கிழமை தொடங்கவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு அந்த மாணவனால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.
தோழியுடன் விகாரைக்கு சென்ற மாணவன்
ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |