அமெரிக்காவில் திடீரென வீசிய பயங்கர சூறாவளி -வெளியானது வீடியோ
United States of America
By Sumithiran
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆன்டோவர் நகரில் மிகப்பெரிய சூறாவளி திடீரென வீசியதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
விச்சிட்டா நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிய அந்த சூறாவளி பல வீடுகளையும், கட்டடங்களையும் சேதப்படுத்தியது.
சூறாவளியை அடுத்து மின் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சூறாவளி, பட்லர் மற்றும் செட்விஜ் கவுண்டிகள் வழியே கடந்து செல்லும் போது பயங்கரமாக சுழன்று சென்றதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் விச்சிட்டா நகரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100 கட்டடங்கள் வரை சேதமடைந்திருப்பதாக நகர மேயர் விப்பிள் தெரிவித்துள்ளார்.
Destructive tornado tearing through Andover KS minutes ago pic.twitter.com/O5KL1Zdcrk
— Reed Timmer (@ReedTimmerAccu) April 30, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி