இராணுவத்தால் ஏற்படவுள்ள பயங்கர நிலைமை - அரசுக்கு கடும் எச்சரிக்கை
நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள்
கமல் குணரத்னவின் இராணுவத்தைப் பயன்படுத்தி பலவந்தமாக மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முயன்றால், நினைத்துப் பார்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படுமென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும்
நாட்டில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முதலில் மக்களின் விருப்பதைப் பெற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கொண்டுவரப்பட்ட வரி திருத்தங்களை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கிழித்தெறிந்ததோடு, வரியை அறவிடுவதற்குப் பதிலாக நாணயத்தாள்களை அச்சிட்டு செலவு செய்து பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டது.
எனினும், தற்போது மீள வரிகளை அதிகளவில் அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படியென்றால் எதற்காக ஆட்சிக்கு வந்ததும் வரிகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
