பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி முகவர்களை பாதுகாக்கும் காவல்துறையினர் மீது தாக்குதல்
பாகிஸ்தானில்(pakistan) போலியோ தடுப்பூசி(polio) முகவர்களைப் பாதுகாக்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்படுவது மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான நாடு தழுவிய போலியோ தடுப்பூசி பிரச்சாரம் சமீபத்தில் தொடங்கிய நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலியோ தடுப்பூசி முகவர்களைப் பாதுகாக்கும் ஒரு காவல்தறை அதிகாரி கொல்லப்பட்டதாக ட்ரிப்யூன் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல்
இந்த துப்பாக்கிச் சூட்டை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்தியதாகவும், பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி இயக்கங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் தொடரும் தாக்குதல்கள்
உலகளவில் போலியோ தொற்றுநோய் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இது தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சுகாதார பிரதிநிதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் பாகிஸ்தான் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |