சுவீடன் நாடாளுமன்றத்தை தாக்குவதற்கு திட்டம் : அதிரடியாக இருவர் கைது
Afghanistan
Sweden
Germany
By Sathangani
சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரே நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் இப்ராஹிம் எம்.ஜி மற்றும் ரமின் என். என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு
ஸ்டொக்ஹோம் நகரிலுள்ள சுவீடன் நாடாளுமன்றத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி காவல்துறையினரையும் ஏனையோரையும் கொல்வதற்கு இவர்கள் திட்டமிட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டமைக்கு பதிலடியாக இத்தாக்குதலை இவர்கள் திட்டமிட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி