ஆழ்கடலில் மூழ்கிய தாய்லாந்துக் கப்பல் - வெளியான அதிர்ச்சிக் காணொளி
தாய்லாந்துக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஆழ்கடலில் கவிழ்ந்ததில் காணாமல் போன 31 மாலுமிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (18) இரவு தாய்லாந்து வளைகுடாவின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் கடலில் கண்காணிப்புக்குச் சென்று கொண்டிருந்த கப்பல் புயல் காரணமாக கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்போது, கப்பலில் சுமார் 100 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கும் நடவடிக்கை
புயல் காரணமாக கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் இயந்திர அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நிவாரணக் குழுக்கள் 75 மாலுமிகளை மீட்டுள்ளதாகவும், மேலும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18/12/2022
— Elizabeth Vstx (@EVostox) December 19, 2022
Breaking News
Royal Thai Navy HTMS Sukhothai Corvette of Ratanakosin Class sunk after storm in Gulf of Thailand.
On 18 December 2022 while on sea patrol approximately 20 miles from naval base. HTMS Sukhotai were hit by a massive storm which led--- pic.twitter.com/le8AmGo0bF
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

