இராஜதந்திர கடவுச்சீட்டில் தாய்லாந்து நுழையும் கோட்டாபய..! உறுதிப்படுத்தியது தாய்லாந்து அரசாங்கம்
கோட்டாபய ராஜபக்சவிற்கு தாய்லாந்து செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா கோரியுள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனீ சங்க்ரட் (Tanee Sangrat) இந்த விடயத்தினை உறுதிப்ப்டுத்தியுள்ளார்.
இதேவேளை, 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதி வழங்கக்கூடிய இராஜதந்திர கடவுச்சீட்டுடன் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்து நுழைவதில் தாய்லாந்து அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய எப்போது தாய்லாந்து வருவார்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக இன்று சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், இது தொடர்பில் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச எப்போது தாய்லாந்து வருவார் என்று தாய்லாந்து அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, மற்றொரு நாட்டை தெரிவு செய்தார் கோட்டாபய..! நாளை பயணம்