பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில்-முதன்முறையாக தைபொங்கல் பெருநாள்

Thai Pongal Tamils France
By Jaso Jan 07, 2023 07:50 PM GMT
Report

பிரான்ஸ் தமிழர்களின் ஒர் அடையாளமாகவுள்ள லா சப்பல் தமிழர் வர்த்தகர் பகுதியில், தமிழர் திருநாளாம் தைபொங்கல் பெருநாளினை, முதன்முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் முன்னெடுப்பதில் பெருமகிழ்வடைகின்றது.

எதிர்வரும் சனவரி 15ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு பொதுப்பொங்கலிடலுடன் நிகழ்வுகள் தொடங்க இருக்கின்றன. ஒவ்வொரு வர்த்தகர்களின் ஒரு பிடி அரிசியின் கூட்டுப்பொங்கலாக, தமிழர்களின் பண்பாட்டினை பல்லின மக்களுக்கும் வெளிப்படுத்தும் இத்திருநாளில் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமம்

பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில்-முதன்முறையாக தைபொங்கல் பெருநாள் | Thai Pongal Festival Of French Tamils

இப்பெருநாளினை மையப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல பரிசில்கள் வழங்கும் வகையில் நல்வாய்ப்பு சீட்டும் வர்த்தக நிலையில் வழங்கப்படுகின்றது.

இயல் இசையென தமிழர்களின் பாரம்பரிய கலைவடிவங்கள் சங்கமிக்க, பரிஸ் 10ம் வட்டார நகரசபையின் அங்கீகாரத்துடனும், வட்டார காவல்துறையின் ஒத்துழைப்புடனும் வெளியரங்க நிகழ்வாக இது அமைய இருக்கின்றது.

இது தொடர்பில் இலங்கை - இந்திய வர்த்தக சங்கம் ஜனவரி 5ம் நாள் வியாழக்கிழமை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி, இந்நிகழ்வு தொடர்பான விபரங்களை உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்கு அறிவித்திருந்தது.

பிரான்ஸ் வாழ் தமிழர்களின் அடையாளம்

பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில்-முதன்முறையாக தைபொங்கல் பெருநாள் | Thai Pongal Festival Of French Tamils

பிரான்ஸ் வாழ் தமிழர்களின் ஓர் அடையாளமாக லா சப்பல் தமிழர் வர்த்தக மையமானது, பிரெஞ்சு ஊடகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் என பல்வேறு மட்டங்களிலும் ஓர் அங்கீகாரத்தினை பெற்றுள்ள நிலையில், இப்பகுதியில் தமிழர்களின் பண்பாட்டு பெருநாளாகிய தைத்திருநாளினை கொண்டாடுவது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைவதோடு, இதன்பால் கிடைக்கின்ற சமுக,பண்பாட்டு அங்கீகாரமானது எதிர்காலத்தில் தமிழர்களுக்கு புதிய கதவுகளை பிரெஞ்சு தேசத்தில் திறக்கும் என்ற நம்பிக்கையினை சங்கத்தின் தலைவர் இராசையா சிறிதரன் வெளிப்படுத்தினார்.

வர்த்தகர்களின் நிகழ்வாக மட்டுமல்லாது வாடிக்கையாளர்களையும் இணைத்த ஒர் கூட்டுநிகழ்வாக, 2 யூறோ பெறுமதியான நல்வாய்ப்பு சீட்டு வர்த்த நிறுவனங்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொருளாளர் ஏகாம்பரம் மதிவதணன் , நிகழ்வரங்கில் குலுக்கல் முறையில் அதிஷ்டம் பார்க்கப்படும் என்றார்.

தமிழர்களின் மரபுசார்ந்த கலைவடிவங்கள்

பிரான்ஸ் தமிழர்களின் அடையாளத்தில்-முதன்முறையாக தைபொங்கல் பெருநாள் | Thai Pongal Festival Of French Tamils

கரகாரட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என தமிழர்களின் மரபுசார்ந்த கலைவடிவங்கள் நிகழ்வரங்கார அமைய இருப்பதோடு, நடனம், பாடல் , இசை என இயல் இசையோடு, தமிழர் திருநாள் தொடர்பில் பிரெஞ்சு மொழியில் காணொளி ஆவணம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது என உப-தலைவர் வின்சன் றூபன் தெரிவித்திருந்தார்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்கின்ற கோடைகால பெருநிகழ்வாக தேர்த்திருவிழா அமைவதுபோல், எதிர்காலத்தில் தமிழர் திருநாளும் பல்லாயிரணக்கான மக்கள் பங்கெடுக்கின்ற குளிர்கால புத்தாண்டு நிகழ்வாக இப்பகுதியில் தைத்திருநாள் அமையும் என்ற நம்பிக்கையினை முன்னாள் தலைவரும் செயற்குழு உறுப்பினருமாகிய செல்லத்துரை சிறிபாஸ்கரன் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024