சிங்கப்பூரில் களைகட்டவுள்ள தைப்பூசம்
விரதங்கள், உற்சவங்கள், நன்னாள், நல்ல நேரம் என ஒரு ஆண்டில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த விழாக்கள், இறைவனுக்கான பூஜை நாட்கள் இந்துக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும், பிறந்த தையில், புதிரெடுக்க, புதுவேலை தொடங்கவென இந்துக்களால் கொண்டாடப்படும் சிறப்பான ஒரு நாளாக தைப்பூசம் விளங்குகிறது.
இந்த ஆண்டில் (2024) எதிர்வரும் வியாழனன்று (25) வரவிருக்கும் தைப்பூசத் திருநாள், சிங்கப்பூரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றதென்பது நம்மில் எத்தனை பெருக்குத் தெரியும்.
ஊரே களைகட்டும்
இந்துக்கள் பரவி வாழும் தேசங்களை எல்லாம் தாண்டி சிங்கப்பூரில் வேலேந்தி நிற்கும் வேலவன் தைப்பூசத்தன்று கோலாகலமாக விழாக்கோலம் காண்கின்றார்.
தைப்பூச நன்னாளிற்கு முன்னாளில் இருந்தே அங்கு பூஜை, விழா என ஊரே களைகட்ட ஆரம்பித்து விடும்.
சிங்கப்பூரில் வெலில் மூலவராய் வீற்றிருக்கும் வேலவரிற்கு, பாலாபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்ட மூலவரான வேலவன், வெள்ளித்தேரேறி ஊர்வலமாய் போகும் காட்சியை காண ஊரெங்கும் இருந்து பக்த கொடிகள் திரண்டு வருவது அங்கே ஒரு சிறப்பான விடயமாக விளங்குகிறது.
நேர்த்திக்கடன் செலுத்துதல்
இந்த விழா நாளிலே, தங்கள் அன்பையும் பக்தியையும் நேர்த்திகளின் வாயிலாக செலுத்தவும் பக்தர்கள் குவிகிறார்கள், காவடிகள் சுமந்தும், அலகுகள் குத்தியும் தங்கள் நேர்த்திகளை இந்நாளன்று நிறைவேற்றுகிறார்கள்.
இந்துக்களை கடந்து சீனர்களையும் தன் அழகால் வசீகரிக்க முருகன் தவறவில்லை என்று கூறும் வண்ணமாக, சீனர்களும் இங்கு கூடி தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றி வணங்குவது சிறப்பான விடயமாக அமைகின்றது என்றால் அது மிகையாகாது.