அமைச்சர் தம்மிக்க பெரேராவின் எதிர்கால திட்டம் அம்பலம்
அரச தலைவர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த தம்மிக்க பெரேரா
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா அரச தலைவர் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதாக சிங்கள இணையப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்த கருத்தை அடுத்து, அந்த பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று (06) காலை விசேட செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
அரச தலைவராகும் கனவு
ரணில் விக்கிரமசிங்கவிடம் பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அப்படியான திட்டம் இருந்தால் தம்முடன் விவாதத்திற்கு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தம்மிக்க பெரேரா சவால் விடுத்தார்.
தம்மிக்க பெரேராவுக்கு பிரதமர் மற்றும் அரச தலைவராகும் கனவு இருந்தது என்பது அனைவரும் அறிந்த இரகசியம். எல்லாவற்றையும் மீறி, அவர் தனது கனவில் பயணம் செய்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
