கனடாவில் வசிக்கும் இந்திய தம்பதிக்கு காணொளி மூலம் வழங்கப்பட்ட விவாகரத்து
தற்போது கனடாவில் வசித்துவரும் இளம் இந்திய தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் இந்திய நீதிமன்றம் ஒன்று விவாகரத்து வழங்கியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த தம்பதி கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் திருமணம் நடைபெற்றது.
எனினும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் குடும்ப கருத்துவேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து கனடாவில் வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
விவாகரத்து கேட்டு மனுதாக்கல்
பிரிந்து வாழும் 31 வயது கணவர், 24 வயது மனைவி விவாகரத்து கேட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே குடும்பநல நீதிமன்றில் மனுதாக்கல் செய்தனர்.

2 பேரும் வெளிநாட்டில் இருப்பதால் காணொலி காட்சி மூலம் விவாகரத்து வழக்கு மீதான விசாரணை நடந்தது. 6 மாத காத்திருப்புக்கு பிறகு தம்பதி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.இதையடுத்து நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
இணைந்து வாழ ஆர்வம் காட்டாத தம்பதி
இதுகுறித்து நீதிபதி ஆர்.எஸ்.பகரே அவரது தீர்ப்பில், "பயிற்சி பெற்ற மத்தியஸ்தரால் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் தம்பதி இணைந்து வாழ ஆர்வம் காட்டவில்லை.

image legal india
மனுதாரர்கள் பராமரிப்பு தொகை, ஜீவனாம்சம், நிகழ்கால, எதிர்கால பிரச்சனைகள் குறித்து பரஸ்பரம் தீர்வு கண்டுள்ளனர். அவர்களுக்கு இடையேயான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன" என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 21 மணி நேரம் முன்