யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற தர்மலிங்கத்தின் நினைவுப் பேருரை
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நேற்று (04) மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் அவர்களின் நினைவுப் பேருரை முதன் முறையாக நிகழ்த்தப்பட்டது.
கல்லூரியின் பீடாதிபதி சு பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச லலீசன் ” தர்மலிங்கம் தந்த கொடை” என்ற பொருளில் நினைவுப் பேருரை ஆற்றினார்.
இதேவேளை கோப்பாய் பிரதேசத்தில் தர்மலிங்கம் குடும்பத்தினர் கல்வியியற் கல்லூரிக்கு 220 பரப்பு காணியை உவந்து அளித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகளை விதந்து பேசினார்.
4500 ஆசிரியர்கள்

குறிப்பாக கடந்த 23 ஆண்டுகளில் இக்கல்வியற் கல்லூரியில் 4500 ஆசிரியர்கள் பயிற்சி பெற்று இலங்கையின் பல பாகங்களிலும் சேவையாற்றுவதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் நிறைவுரை ஆற்றினார்.
கல்லூரி சமூகத்தினரும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் அபிமானிகளும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

