யாழ்ப்பாணத்தில் இளம் தவில் வித்துவானுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Jaso
யாழில், கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் நேற்றையதினம் (19) உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை - கூழாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
இவருக்கு கடந்த 17ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் காவல்துறையினர் நெறிப்படுத்தினர். கிருமித்தொற்றினால் உடற்கூறுகள் செயலிழந்ததால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 2 நாட்கள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்